சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
22 ஆனி 2026 திங்கள் 12:22 | பார்வைகள் : 141
சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;”மேகதாது அணை தீர்மானத்தில் எதிர்க்கட்சித்தலைவர் கூறிய திருத்தத்தை முதல்-அமைச்சர் விஜய் சேர்த்தது அவையை மீறிய செயலாகும். விதிகளுக்கு எதிராக தீர்மானத்தில் திருத்தம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என சொல்வது ஏன்?பேச அனுமதி அளிக்கப்படவில்லைஅரசின் தனித்தீர்மானத்தில் திருத்தம் செய்தது தொடர்பாக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப கடிதம் கொடுத்திருந்தோம்.
உரிமை மீறல் பிரச்சினையை அதிமுக சார்பில் அவைக்கு கொண்டு வர அனுமதி கேட்டோம். ஆனால் உரிமை மீறல் பிரச்சினை குறித்து பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சட்டசபையில் எங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம்.”இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan