பிரான்ஸ்–ஈராக் உலகக்கோப்பை போட்டிக்கு புயல் அச்சுறுத்தல்!!
22 ஆனி 2026 திங்கள் 09:04 | பார்வைகள் : 446
இன்றிரவு 11 மணிக்கு( பிரான்ஸ் நேரப்படி) பிரான்ஸ் மற்றும் ஈராக் அணிகள் இடையிலான உலகக்கோப்பை போட்டி, பிலடெல்பியாவில் எதிர்பார்க்கப்படும் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் காரணமாக இடைநிறுத்தப்படுவதற்கான அபாயத்தில் உள்ளது. போட்டி நடைபெறும் நேரத்திலேயே வானிலை மோசமாக இருக்கும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
பிலடெல்பியா பகுதியில் வானிலை அவசர எச்சரிக்கை அமலில் உள்ளது. பலத்த காற்று, கடும் மின்னல் தாக்கங்கள், கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் போக்குவரத்து மற்றும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் பாதிக்கப்படலாம்.
அமெரிக்க விதிகளின்படி, போட்டி நடைபெறும் இடத்திலிருந்து 13 கி.மீ. சுற்றளவில் மின்னல் தாக்கினால் போட்டி உடனடியாக 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும்; ஒவ்வொரு புதிய மின்னல் தாக்கமும் மேலும் 30 நிமிட இடைவேளையை ஏற்படுத்தும். எனவே, செனகலை வீழ்த்தி உற்சாகத்தில் உள்ள பிரான்ஸ் அணி, ஈராக் அணிக்கு எதிரான போட்டியில் தாமதங்களையும் இடைநிறுத்தங்களையும் சந்திக்கக்கூடும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan