Paristamil Navigation Paristamil advert login

AI மனிதர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் - நம்பிக்கை அளிக்கும் ஜெஃப் பெசோஸ்

AI மனிதர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் - நம்பிக்கை அளிக்கும் ஜெஃப் பெசோஸ்

21 ஆனி 2026 ஞாயிறு 16:32 | பார்வைகள் : 178


அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வேலை வாய்ப்புகளை குறைக்காது, மாறாக அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பாரிசில் நடைபெற்ற VivaTech மாநாட்டில் பேசிய அவர், AI தொழில்நுட்பம் மனிதர்களின் உழைப்புத் தேவையை அதிகரிக்கும் என்றும், பல துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் கூறினார்.

“AI மனிதர்களை தேவையற்றவர்களாக ஆக்கும்” என்ற கருத்தை அவர் மறுத்துள்ளார்.

AI தொழில்நுட்பம் உற்பத்தி திறனை உயர்த்தி, புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக்கும். இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் குறைவதற்குப் பதிலாக, தொழிலாளர் பற்றாக்குறை உருவாகும் வாய்ப்பு கூட உள்ளது என்கிறார் ஜெப்ஃ பெசோஸ்.

மேலும், அவர் தனது புதிய AI முயற்சியான Prometheus குறித்து கூறினார். இது உற்பத்தித் துறையில் வேகத்தை அதிகரிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும் உதவும் என என நம்புகிறார்.

தனது விண்வெளி நிறுவனமான Blue Origin பற்றியும் அவர் பேசினார். சந்திரனை மனிதர்களுக்கான நிரந்தர தளமாக மாற்றும் கனவை மீண்டும் வலியுறுத்தினார்.

சமீபத்தில் New Glenn ரொக்கெட் சோதனையில் ஏற்பட்ட சிக்கல்களை ஒப்புக்கொண்ட அவர், விரைவில் மீண்டும் விண்ணில் பாயும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

AI, ரோபோடிக்ஸ், விண்வெளி தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும், மனிதர்களின் பங்கு குறையாது, மாறாக புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று பெசோஸ் தெரிவித்துள்ளார்.