Paristamil Navigation Paristamil advert login

FIFA உலகக்கிண்ணம்: துனிசியாவை துவம்சம் செய்த ஜப்பான் அணி

FIFA உலகக்கிண்ணம்: துனிசியாவை துவம்சம் செய்த ஜப்பான் அணி

21 ஆனி 2026 ஞாயிறு 16:16 | பார்வைகள் : 188


ஃபிபா உலகக்கிண்ணப் போட்டியில் ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.

எஸ்டாடியோ மோன்டெர்ரே மைதானத்தில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் ஜப்பான் மற்றும் துனிசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே ஜப்பானின் டைச்சி கமடா கோல் அடித்தார்.  

அதனைத் தொடர்ந்து 31வது நிமிடத்தில் சக அணி வீரர் அயாஸ் உயீடா கோல் அடித்தார்.

பின்னர் ஜூன்யா இட்லோ 69வது நிமிடத்திலும், அயாஸ் உயீடா (Ayase Ueda) 83வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர்.

இதன்மூலம் ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது. ஜப்பான் அணிக்கு நடப்பு தொடரில் இது முதல் வெற்றியாகும்.