Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்பு - 7 பேர் பலி

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்பு - 7 பேர் பலி

21 ஆனி 2026 ஞாயிறு 07:10 | பார்வைகள் : 187


பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

மார்க்கா பெரா பகுதியில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பிக்கப் வாகனத்தை இலக்காகக் கொண்டு ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கும் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் வாகனத்தில் பயணித்தவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களை இலக்காகக் கொண்டு சில மணி நேரங்களுக்குப் பின்னர் மற்றொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டாவது வெடிப்பில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி Asif Ali Zardari இரங்கல் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடைபெற்ற பகுதியை முற்றுகையிட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அல்லது ஆயுதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.