Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் அணியில் பயிற்சியாளராக இணையும் கங்குலி, யுவராஜ் சிங்

ஐபிஎல் அணியில் பயிற்சியாளராக இணையும் கங்குலி, யுவராஜ் சிங்

20 ஆனி 2026 சனி 18:22 | பார்வைகள் : 278


DC அணியின் பயிற்சியாளர் குழுவில் சவுரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2027 ஐபிஎல் தொடரை மார்ச் மாதத்திலே நடத்துவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் பாரிய மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியும், துடுப்பாட்ட பயிற்சியாளராக இயன் பெல்லும் உள்ளனர்.

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னர் இவர்களுக்கு மாற்றாக தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியையும், துடுப்பாட்ட பயிற்சியாளராக யுவராஜ் சிங்கையும் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கங்குலி 2019 ஐபிஎல் தொடரில் DC அணியின் வழிகாட்டியாக இருந்தார். மேலும், JSW Sports நிறுவனத்தின் கிரிக்கெட் இயக்குநராக 2024 ஆம் நியமிக்கப்பட்ட கங்குலி, 2025 SA20 தொடரில், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

2019 ஆம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற யுவராஜ் சிங்கிற்கு இதுவே முதல் பயிற்சியாளர் பணியாக இருக்கும்.