Paristamil Navigation Paristamil advert login

பிரேசில் முதல் வெற்றி: களமிறங்கும் நெய்மர்

பிரேசில் முதல் வெற்றி: களமிறங்கும் நெய்மர்

20 ஆனி 2026 சனி 18:19 | பார்வைகள் : 321


ஸ்கொட்லந்து அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ணப் போட்டியில் பிரேசிலின் நெய்மர் களமிறங்க உள்ளார் என தெரிய வந்துள்ளது.

பிலடெல்பியா மைதானத்தில் நடந்த ஹைதிக்கு எதிரான போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  

மேத்தியூஸ் குன்ஹா இரண்டு கோல்களும் (23 மற்றும் 36வது நிமிடம்), வினிசியஸ் ஜூனியர் ஒரு கோலும் அடித்தனர். நடப்பு தொடரில் பிரேசில் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

இதற்கிடையில், கடந்த 2 போட்டிகளில் விளையாடாத நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்க உள்ளதும் உறுதியாகியுள்ளது.

பிரேசில் பயிற்சியாளர் கார்லோ ஆன்சிலோட்டி, ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் விளையாட தயாராக உள்ளார் என கூறியுள்ளார்.

அத்துடன் அவர் தனியாக பயிற்சி மேற்கொள்வார் என்றும், நாளை முதல் அணியுடன் இணைந்து பயிற்சி செய்வார் என்றும் கார்லோ தெரிவித்துள்ளார்.