இலங்கையில் சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி
20 ஆனி 2026 சனி 12:36 | பார்வைகள் : 178
2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இம்முறை விஞ்ஞானப் பாடத்தில் 70.1% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 69.07% ஆகக் காணப்பட்டது.
மேலும், இம்முறை கணிதப் பாடத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 71.06% ஆகக் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan