ஜனநாயகன் படத்தின் அறிவிப்பு வருமா?
20 ஆனி 2026 சனி 12:05 | பார்வைகள் : 181
வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, மற்றும் பலர் நடித்துள்ள "ஜனநாயகன்" படத்தின் வெளியீடு எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இன்னும் வெளியாகவில்லை. விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.
முதல்வரான பின்பு கூட தணிக்கை வாரியம் இப்படத்திற்கான சான்றிதழை வழங்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் என்றாலும் கூட தங்களது விதிமுறைகளை அவர்கள் கடுமையாகப் பின்பற்றுகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
முதல்வராக இருந்தாலும் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தணிக்கை சான்றிதழைப் பெற விஜய் தரப்பில் யோசிக்கிறார்களா என்ற மற்றொரு கேள்வியும் கூட எழுகிறது.
ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வர உள்ளது. முதல்வராக முதல் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினமாவது "ஜனநாயகன்" படத்தின் அறிவிப்பு வருமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan