எரிசக்திக்கு இந்தியா இறக்குமதியை நம்பியிருக்கக்கூடாது: முகேஷ் அம்பானி
20 ஆனி 2026 சனி 10:28 | பார்வைகள் : 167
இந்தியாவின் எதிர்காலம் எரிசக்தி பாதுகாப்பின்மையால் முடக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பு என முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த அந்த நிறுவனத்தின் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எரிசக்திக்கு 70 சதவீதம் இறக்குமதியை இந்தியா நம்பி உள்ளது. இது உலகளாவிய சூழ்நிலைகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. தற்போதைய நிலை நீண்ட காலம் நீடிக்கக்கூடியது இல்லை. இந்தியாவின் எதிர்காலம் எரிசக்தி பாதுகாப்பின்மையால் முடக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பு.
இந்தியாவின் எரிசக்தி தன்னிறைவு இலக்கை அடைய ஆதரிக்கும் வகையில், சூரிய ஆற்றல், காற்றாலை மின்சாரம், ஹைட்ரஜன் எரிசக்தி, நிலக்கரி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த எரிசக்தி உத்தியை ரிலையன்ஸ் செயல்படுத்தி வருகிறது.
நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கம், உயிரி ஆற்றல், புதிய ஆற்றல், எண்ணெயில் இருந்து ரசாயனம் உள்ளிட்டவற்றை அடக்கிய ஐந்து ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பிரிவுகளை ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது.
பசுமை ஆற்றல் சூழலமைப்பு, அதன் பாரம்பரிய ஆற்றல் வணிகத்தை மாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் உருவாக்கும். புதிய ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு உலகள அளவில் எளிதில் பின்பற்ற முடியாத ஒரு வணிக மாதிரியை உருவாக்க உதவும். இவ்வாறு முகேஷ் அம்பானி கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan