Paristamil Navigation Paristamil advert login

தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஆளுமை பிரதமர் மோடி; சசி தரூர்

தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஆளுமை பிரதமர் மோடி; சசி தரூர்

20 ஆனி 2026 சனி 09:24 | பார்வைகள் : 181


தேசிய அரங்கில் பிரதமர் மோடி ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்வதாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் அவர் கூறியதாவது; பிரதமர் மோடி அளப்பரிய ஆற்றல், மிகுந்த சுறுசுறுப்புடன் இருக்கிறார். அவர் ஒரு தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளர். இந்த நாடு ஹிந்தி மொழியில் கண்ட மிகச்சிறந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர்.

ஏனெனில், ஹிந்தி மொழியைப் பேசுபவர்களிடம் அவர் பெரிதும் சென்றடைகிறார். தேசிய அரங்கில் அவர் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி, வாழ்க்கை, சமூகம் மற்றும் அரசியலின் பல அம்சங்களில் அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவர் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் அல்ல. தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமர் தான். நாட்டின் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற சாதனையைப் படைக்க மோடி  இன்னும் சில காலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இந்திரா  நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தார். ஆனால் அது வெவ்வேறு காலகட்டமாக இருந்தது, இவ்வாறு அவர் கூறினார்.