Paristamil Navigation Paristamil advert login

சமூகத்தின் முகத்திரையைக் கிழித்தாரா சசி?

சமூகத்தின் முகத்திரையைக் கிழித்தாரா சசி?

19 ஆனி 2026 வெள்ளி 17:18 | பார்வைகள் : 190


சசி இயக்கத்தில் சுவாசிகா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் நூறு சாமி. இந்த படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்:

சுவாசிகா சிறு வயதிலேயே கணவனை இழந்து தனது இரண்டு மகன்களையும் மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட அது அவரின் மகன்களுக்கு பிடிக்காமல் போகிறது. எனவே அந்த ஆசையை கைவிடுகிறார். அதேநேரம் பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் காதலிக்க தொடங்கியதும் அம்மாவின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவருக்கு திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்கிறார்கள். விஜய் ஆண்டனியை சந்திக்கும் சுவாசிகாவுகு அவர் மீது காதல் வரவே அவரை மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் அதை ஊர் மக்கள் அதை எதிர்க்கிறார்கள். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரமான சுவாசிகா பல காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பெண்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் போது அவரின் சிறப்பான நடிப்பில் ரசிகர்கள் கண் கலங்கி விடுகிறார்கள்.மனதில் உள்ள ஆசையை மகன்களுக்காக தியாகம் செய்யும் போதும், விஜய் ஆண்டனியின் நல்ல குணத்தை பார்த்து அவர் மீது விருப்பப்படுவதும், மகன்களுடன் அமர்ந்து சாப்பிடும் போது அழும் காட்சியிலும் ரசிகர்களை கலங்கடித்து விடுகிறார்.


விஜய் ஆண்டனி வரும் காட்சிகள் குறைவு என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு கிளி கன்னியாஸ்தியாக வ்வரும் லிஜோமோல் ஜோஸ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் கருணாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். பாலாஜி ஸ்ரீராம் தனது இசையால் மனதை வருடுகிறார்.  தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு சிறப்பு. படத்தில் வசனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறைய பிளஸ் இருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் முழுமையடையாமல் இருக்கிறது. உணர்வுப் பூர்வமான காட்சிகளை கூட காமெடி மூலம் சொன்னதால் அது மனதில் ஒட்டவில்லை..

உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை இயக்குனர் சசி எழுதிதாக சொல்லப்படுகிறது. பெண்ணின் உணர்வை குறிப்பாக தாயின் உணர்வை மதிக்க வேண்டும் என்கிற கருத்தை நூறு சாமி ஆழமாக சொல்கிறது.