Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஓம்’…

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஓம்’…

19 ஆனி 2026 வெள்ளி 17:00 | பார்வைகள் : 187


அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனுஷும் இப்படத்தை தயாரித்து வருகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படக்குழு தற்போது படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஓம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. வெளியான காட்சிகளை பார்க்கும்போது, செம்மரம் கடத்தல் மற்றும் வனப்பகுதி பின்னணியில் உருவாகும் கதைக்களம் கொண்டதாக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் தலைப்பு வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “தலைப்பு ஆன்மிகமாக தோன்றினாலும், படத்தில் ஆழமான உணர்வுகளும் மனித உறவுகளும் இடம்பெற்றுள்ளன. தற்போது 65 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தனுஷின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் இதுவும் ஒன்று. மம்முட்டி ‘கார்த்திகேயன்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும். தொடர்ந்து டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாக்களும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். ‘ஓம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.