Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பயணி கைது

19 ஆனி 2026 வெள்ளி 15:45 | பார்வைகள் : 278


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பயணி கைது செய்யப்பட்டுள்ளார்

தாய்லாந்தில் இருந்து 75 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்'ரக போதைப்பொருளை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் 41 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் என தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தின் Green Channel வழியாக போதைப் பொருளை கடத்த முயன்ற போதே அவர் கைதானார்.

குறித்த நபரிடமிருந்து 7.5 கிலோகிராம் குஷ்'ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.