Paristamil Navigation Paristamil advert login

இரவோடு இரவாக உக்ரைன் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்

இரவோடு இரவாக உக்ரைன் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்

19 ஆனி 2026 வெள்ளி 16:08 | பார்வைகள் : 323


உக்ரைனிய நகரங்களை குறிவைத்து இரவோடு இரவாக ரஷ்யா 90 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை இரவு ரஷ்ய படைகள் தீவிரமான வான்வழித் தாக்குதலை முன்னெடுத்தனர்.

கிட்டத்தட்ட 90 ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டதாக உக்ரைனிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட ட்ரோன்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க், ஓரியல் மற்றும் பிரிமோர்ஸ்கோ - அக்தார்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்து உக்ரைன் நோக்கி ஏவப்பட்டுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவின் குவார்டிஸ்கோ பகுதியில் இருந்தும் இந்த ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ட்ரோன் தாக்குதல்களை தடுத்து நிறுத்த, உக்ரைன் வான் பாதுகாப்பு படை, விமானப்படை, ஏவுகணைப் பிரிவுகள் மற்றும் மொபைல் ஃபயர் குழுக்கள் ஆகியவை இணைந்து செயல்பட்டன.

ரஷ்யா ஏவியதாக கூறப்படும் 90 ட்ரோன்களில் 79 ட்ரோன்களை உக்ரைனிய படைகள் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தற்காப்பு வளையங்களை தாண்டி 9 ட்ரோன்கள் 8 வெவ்வேறு இடங்களை தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.