சட்டசபையில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து பேசுங்கள்: ஸ்டாலின்
19 ஆனி 2026 வெள்ளி 12:28 | பார்வைகள் : 157
சட்டசபையில், மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து, சரியான வாதங்களை முன்வைத்து பேச வேண்டும்'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழக அரசின், முதல் சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது. சபையில் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்க, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து, ஸ்டாலின் பேசியதாவது:
பிரதான, வலுவான எதிர்க்கட்சியாக, நாம் செயலாற்ற வேண்டும். ஆளுங்கட்சிக்கு எதிராக, மக்கள் வீதியில் இறங்கி கேள்வி கேட்டு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து, சரியான வாதங்களை முன்வைக்க வேண்டும். கேள்விகள் கேட்கலாம். சட்டசபை கூட்டத்தில், நுாறு சதவீதம் பங்கேற்க வேண்டும்.
தொகுதி மக்களை சந்தியுங்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்ய தி.மு.க.,வினர் ஓடி வருவர் என, மக்கள் கூற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார் என, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan