Paristamil Navigation Paristamil advert login

சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி!: பிரதமர் மோடி

சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி!: பிரதமர் மோடி

19 ஆனி 2026 வெள்ளி 11:24 | பார்வைகள் : 168


ஏ.ஐ., தொழில்நுட்பம், மனிதர்களை எந்தளவுக்கு மேம்படுத்துகிறது என்பதில்தான் அதன் உண்மையான வெற்றியே அடங்கியுள்ளது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


ஜி-7 மாநாட்டின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவுத் திறன் எனப்படும், ஏ.ஐ., குறித்த அமர்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். ​இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


உலக நாடுகள் மத்தியில் தற்போது மிக முக்கியமான பேசுபொருளாக ஏ.ஐ., தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. இது உலகறிந்த உண்மை.​சாதாரண, சாமானிய மனிதர்களுக்கு எந்தளவுக்கு நன்மைகளை வழங்கி, அவர்களை மேம்படுத்துகிறது என்பதில்தான் ஏ.ஐ.,யின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. ​இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.