Paristamil Navigation Paristamil advert login

மேகதாது அணைக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம்: முதல்வர் விஜய்

மேகதாது அணைக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம்: முதல்வர் விஜய்

19 ஆனி 2026 வெள்ளி 10:22 | பார்வைகள் : 181


காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட  உள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் விஜய் தாக்கல் செய்ய உள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி நீரால் பயன்பெறும் கேரளா, புதுச்சேரி அரசுகளும் எதிர்ப்பு   தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமார்,  மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் டில்லி சென்ற டி.கே.சிவக்குமார், பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்த மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து அளிக்குமாறு வலியுறுத்தினார்.

'கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என, தமிழக சட்டசபையில் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் ஆற்றிய உரை மூலம், தமிழக அரசு அறிவித்தது இருந்தது.

இந்நிலையில் மேகதாது அணை தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.  கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறி தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் நாளை சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார்.