"மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான முடிவு" – கல்வி அமைச்சர்
18 ஆனி 2026 வியாழன் 21:52 | பார்வைகள் : 308
தேசிய கல்வி அமைச்சர் Édouard Geffray, சட்டம் இறுதியாக நிறைவேற்றப்பட்டால், 2026 செப்டம்பர் 1 முதல் உயர்தரப் பாடசாலைகளில் கைபேசி பயன்பாடு தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பிட்ட சில விதிவிலக்குகளைத் தவிர, மாணவர்கள் பாடசாலைக்குள் செல்போன்களை பயன்படுத்த முடியாது.
இந்த நடவடிக்கை இடம்பெறும் சட்ட முன்மொழிவில், 15 வயதிற்குக் குறைவான சிறுவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்வதும் அடங்கியுள்ளது. ஆனால் அந்தப் பகுதி இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அமைச்சரின் கூற்றுப்படி, இந்தத் தடை மாணவர்களின் கவனம், கற்றல் திறன் மற்றும் பள்ளி சூழலை மேம்படுத்த உதவும். இதை நடைமுறைப்படுத்த தேவையான வழிகாட்டுதல்கள் பாடசாலை நிர்வாகங்களுக்கு விரைவில் வழங்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan