FIFA உலகக்கிண்ணம்- ஹாரி கேன் இரட்டை கோல்..குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து
18 ஆனி 2026 வியாழன் 10:35 | பார்வைகள் : 163
FIFA உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதிய FIFA உலகக்கிண்ணப் போட்டி டல்லாஸ் மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஹாரி கேன் கோலாக மாற்றினார்.
36வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மார்ட்டின் பட்டுரினா கோல் அடித்தார். பின்னர் ஹாரி கேன் (Harry Kane) 42வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடிக்க, பதிலடியாக குரோஷியாவின் பெட்டர் முஸா 45+5வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஜூடே பெல்லிங்கம் கோல் அடித்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்க 85வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் கோல் அடித்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் இரு அணிகளின் தரப்பிலும் எந்த வீரரும் மஞ்சள் அட்டை கூட பெறவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan