Paristamil Navigation Paristamil advert login

6 மாதங்களில் பழுதடைந்த EV ஸ்கூட்டர் பேட்டரி

6 மாதங்களில் பழுதடைந்த EV ஸ்கூட்டர் பேட்டரி

17 ஆனி 2026 புதன் 16:44 | பார்வைகள் : 178


அமிர்தசரஸ் மாவட்ட நுகர்வோர் ஆணையம், மின்சார ஸ்கூட்டர் வாங்கிய வாடிக்கையாளருக்கு முக்கிய தீர்ப்பளித்துள்ளது.

சுனில் குமார் குப்தா என்ற நபர் 2018-ல் ரூ71,460 செலவில் Okinawa Praise மின்சார ஸ்கூட்டர் வாங்கினார்.

ஆனால், வாங்கிய ஆறு மாதங்களுக்குள் பேட்டரி பழுதடைந்து, சார்ஜ் நிற்காமல் மொத்தமாக குறைந்துபோகும் நிலை ஏற்பட்டது.

வாடிக்கையாளர் பலமுறை டீலரிடம் புகார் தெரிவித்தும், ஒவ்வொரு முறையும் பழுது சரி செய்யப்பட்டதாக உறுதி அளிக்கப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், சில நாட்களில் மீண்டும் அதே பிரச்சினை தோன்றியது. பேட்டரி உத்தரவாதம் 12 மாதம் மட்டுமே இருந்ததால், அதற்கு பிறகு பேட்டரியை மாற்றித்தர மறுக்கப்பட்டது.

நுகர்வோர் ஆணையம், உற்பத்தியாளர் மற்றும் டீலரிடம் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறையை செய்ததாகக் கண்டறிந்தது. எனவே, ரூ.55,000 மதிப்புள்ள புதிய பேட்டரியை இலவசமாக வழங்க உத்தரவிட்டது.

மேலும், வாடிக்கையாளருக்கு மனஅழுத்தம் மற்றும் தொந்தரவு காரணமாக ரூ.10,000 இழப்பீடு, வழக்கு செலவுக்காக ரூ.5,500 வழங்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு, மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சேவை (After Sales Service) தரம் மற்றும் வாடிக்கையாளர் உரிமைகள் குறித்து முக்கியமான முன்னுதாரணமாக கருதப்படுகிறது.