மேற்காசிய நெருக்கடி வளரும் நாடுகளை பாதிக்கும்: பிரதமர் மோடி
18 ஆனி 2026 வியாழன் 12:38 | பார்வைகள் : 183
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடியால், எரிபொருள், உரம் மற்றும் விநியோக சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் இன்னும் கணிசமான காலத்திற்கு வளரும் நாடுகளை தொடர்ந்து பாதிக்கும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:
அனைவருக்குமான சமச்சீரான, பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் என்ற தலைப்பிலான கூட்டத்தில் உரையாற்றினேன். இந்த தலைப்பிற்கு ஜி7 அமைப்பிற்கு தலைமை ஏற்றுள்ள பிரான்ஸ் முக்கியத்துவம் அளித்துள்ளது பாராட்டத்தக்கது.இன்றைய யதார்த்தம் என்னவென்றால், வளர்ச்சி என்று வரும்போது ஜிடிபி அல்லது வர்த்தக எண்களை பற்றியதாக கேள்வி இருக்கக்கூடாது.உண்மையான கேள்வி என்றால், யாருக்காக வளர்ச்சி யாருடன், எந்த திசையில் என்பதே.
பகிரப்பட்ட வளர்ச்சியே, நோக்கங்களை உண்மையாக்கும் என்பதை இந்தியாவின் அனுபவம் விவரிக்கிறது.அனைவரையும் உள்ளடக்குதல், ஜனநாயக ரீதியாக அதிகாரம் அளித்தல் ஆகியவற்றின் ஒன்றாகும். அது அனைவருக்காகவும், அனைவரின் வளர்ச்சி என்ற தத்துவத்தில் உத்வேகம் பெற்றது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடியால், எரிபொருள், உரம் மற்றும் விநியோக சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் இன்னும் கணிசமான காலத்திற்கு வளரும் நாடுகளை தொடர்ந்து பாதிக்கும். நாம் உண்மையாகவே, சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்த விரும்பினால், மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் மட்டும் அதன் சுமையை தாங்க விடக்கூடாது.
இந்தியா மத்திய கிழக்கு இணைப்பு பொருளாதார வழித்தடத்தை போல் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசுபிக் தீவு நாடுகளில் இணைப்பு திட்டங்களை ஏற்படுத்த முடியுமா?ஜி7 அமைப்பின் மூலதனம் இந்தியாவின் திறமை மற்றும் வளரும் நாடுகளின் உரிமையுடைமை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு சர்வதேச அணிதிரட்டலை நாம் பரிசீலனை செய்யலாம்.
இன்று பல நாடுகள் வயதானவர்கள் கொண்ட சமூகங்களாக மாறிவருகின்றன. ஆனால், இந்தியாவிலும், வளரும் நாடுகளிலும் இளம் திறமையாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் திறன்கள் ஏராளமாக உள்ளன. இதனை பயன்படுத்திக் கொள்ள நாம் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு உலகளாவிய திறன்கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan