அதிக பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் சேதுபதி!..
17 ஆனி 2026 புதன் 16:02 | பார்வைகள் : 177
தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. தொடக்கத்தில் இவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. வழக்கமாக மற்ற நடிகர்கள் செய்யும் எந்த ஹீரோயிசத்தையும் செய்யாமல் இயல்பான கதாபத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் விஜய் சேதுபதி.
எனக்கு நாலு சண்டை வேணும், நாலு பாடல் காட்சி வேணும், அழகான கதாநாயகி வேணும், வெளிநாட்டில் ஒரு பாட்டை எடுக்க வேண்டும், படத்தில் நான் பஞ்ச் டயலாக் பேச வேண்டும் என்றெல்லாம் இயக்குனர்களிடம் எந்த டிமாண்டையும் வைக்காத ஒரே நடிகர் விஜய் சேதுபதி மட்டுமே..
சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க துவங்கிய இந்த காலத்தில் கதைக்கு தேவையான சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே விஜய் சேதுபதி தொடர்ந்து நடத்து வருகிறார். அதேநேரம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது.
இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. உயர்தர காட்சி அமைப்பு, பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் வலுவான தொழில்நுட்ப குழுவுடன் இந்த படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்ததிலேயே இந்த படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan