ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வருகிறதா?
17 ஆனி 2026 புதன் 15:59 | பார்வைகள் : 180
தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் தவிக்கிறது. இந்நிலையில், நாளை மறுநாள் சென்சார் விஷயத்தில் ஒரு நல்ல முடிவு வருகிறது. இதற்காக ஜனநாயகன் படக்குழுவினர் சில, பல வேலைகளை செய்து வருகிறார்கள். 19ம் தேதி சென்சார் கிடைத்தால் ஜூன் 26 அல்லது ஜூலை 3 ம் தேதி படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு.
இது கடைசி கட்ட தீவிர முயற்சி என்பதால் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். இந்த மாதம் அல்லது ஜனநாயகன் ரிலீஸ் ஆனால் சில படங்களுக்கு பாதிப்பு வரும். அந்த படங்களின் வசூல் பாதிக்கப்படும் அல்லது தியேட்டர் கிடைக்காத பிரச்னை உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தமுறையாவது சென்சார் கிடைக்குமா அல்லது கடந்த 4 மாதங்களாக வந்த ஏமாற்றமே மிஞ்சுமா என முதல்வர் ரசிகர்களும், படக்குழுவினரும் காத்திருக்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan