140 ஓட்டங்களுக்கு சுருண்ட மே.தீவுகள்! தட்டித் தூக்கிய சான்ட்னர் படை
17 ஆடி 2026 வெள்ளி 11:40 | பார்வைகள் : 133
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு 3வது ஒருநாள் ஒருநாள் போட்டி கயானாவில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணிகள் 37.1 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேசி கார்ட்டி (Keacy Carty) 48 ஓட்டங்களும், அகஸ்டி மற்றும் ஹெட்மையர் தலா 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜேடன் லென்னோக்ஸ் 4 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 39.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டாம் லாதம் 31 ஓட்டங்களும், டேர்ல் மிட்செல் 28 ஓட்டங்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் விட்டல் லாவ்ஸ் 3 விக்கெட்டுகளும், கார்ரி பியெர்ரே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire