பரிஸின் 17ஆம் வட்டாரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – தீயணைப்பு படையினர் தீவிர நடவடிக்கை!!
17 ஆடி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 334
பரிஸின் 17ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பேயன் (Bayen) வீதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. ஜூலை 16 ஆம் திகதி மாலை சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, ஆறு மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, புகை முழு வீதியையும் சூழ்ந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் வசித்தவர்கள் அனைவரும் இரவு 8 மணியளவில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக பரிஸின் 17ஆம் வட்டார மேயர் Geoffroy Boulard நிலைமையை நேரடியாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார். சமூக வலைத்தளங்களிலும் சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பகிரப்பட்டுள்ள நிலையில், இந்த தீ விபத்தில் எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என தீயணைப்பு துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire