லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க வாட்ஸாப் எண் அறிவிப்பு!
17 ஆடி 2026 வெள்ளி 09:27 | பார்வைகள் : 130
தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாக, 'வாட்ஸாப்' எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை, அரசு அலுவலகங்களில் விளம்பரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அனைத்து அரசு துறைகளுக்கும் தலைமைச் செயலர் சாய்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை;
லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் தொடர்பாக, '94981 80936' என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தொலைபேசி விபரம் அடங்கிய தகவல்களை, அனைத்து அரசு துறையினர், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும் இடங்கள், தொலைபேசி எண்கள் பற்றிய விபரங்கள், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறை போன் நம்பர், முகவரி ஆகியவை தமிழ், ஆங்கிலத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.
அதன்படி, 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்' என்ற வாசகத்துடன், ஊழல் குறித்த புகார்கள் அனுப்ப வேண்டிய இடமாக, 'ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கம், எண் 293, எம்.கே.என்.தெரு, ஆலந்துார், சென்னை 600 016' என்ற முகவரி இடம்பெற வேண்டும்.
அதேபோல், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும், பொது மக்கள் புகார் அளிக்கலாம். 044- - 22321090, 22321085, 22310989, 22342142 -ஆகிய தொலைபேசி எண்களிலும் புகார் தரலாம் என்பதை, அறிவிப்பு பலகைகளில் இடம்பெற செய்ய வேண்டும்.
இதை, அந்தந்த கலெக்டர்கள், துறை செயலர்கள் உறுதி செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், இதை ஆய்வு செய்து உறுதிப் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையினை, முதல்வர் விஜய் தலை தலை மையிலான த.வெ.க.,அரசு, தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட் சியில் தமிழகத்தில் லஞ்ச மும், ஊழலும் புரையோ டிப்போய்விட்டது. அதை சுத்தப்படுத்தும் முயற்சி யாக, இதற்கு முன் எந்த ஒரு அரசியல் தலைவரும், வேறு எந்த ஒரு மாநிலத் திலும் முன்னெடுக்காத துணிச்சலான நடவடிக் கையினை தமிழகத்தில் மேற்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய்.
இந்த ஒரு நல்ல வாய்ப் பினை பயன்படுத்திக் கொண்டு, லஞ்சஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்களும் கரம் கோர்க்க வேண்டும். அரசுத்துறை அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள், அங்குள்ள அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ... உடனடியாக மேற்கண்ட வாட்ஸாப் எண்ணில் முறையிடலாம். மேலும், அருகிலுள்ள அந்தந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்திலும் நேரில் புகார் அளிக்கலாம்.லஞ்சத்தை ஒழிக்க அரசு தன் பங்கிற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளது. இதை வெற்றிகரமாக செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire