Paristamil Navigation Paristamil advert login

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்தியர்களை பணியமர்த்த வேண்டாம்: டிஜிஎம்ஏ

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்தியர்களை பணியமர்த்த வேண்டாம்: டிஜிஎம்ஏ

17 ஆடி 2026 வெள்ளி 07:20 | பார்வைகள் : 139


ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் என கப்பல்  உரிமையார்கள், மேலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடல்சார் நிர்வாகப் பொது இயக்குனரகம்(டிஜிஎம்ஏ) கடிதம் எழுதி உள்ளது.

மேற்காசியா போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள ஈரான், அதன் வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதற்கு ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் கப்பல்களில் ஆட்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு டிஜிஎம்ஏ கடிதம் எழுதி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மறு உத்தரவு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். பாரசீக வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் இயங்கும் கப்பல்களில்  உயர் மட்ட பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரிகள் வெளியிடும் பயண எச்சரிக்கைள், பாதுகாப்பு ஆலோசனைகளை கண்காணித்து சர்வதேச கப்பல் மற்றும் துறைமுகப் பாதுகாப்பு நெறிமுறைக்கு இணங்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.