பொதுமக்களின் புகார் கடிதங்கள் விசாரணைக்கு ஏற்கப்படும்; பசுமை தீர்ப்பாயம் தகவல்
17 ஆடி 2026 வெள்ளி 06:18 | பார்வைகள் : 132
சுற்றுச்சூழல் பாதிப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில், பொதுமக்கள் அனுப்பும் புகார் கடிதங்கள் விசாரணைக்கு ஏற்கப்படும் என, தென்மண்டல பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் கூறியதாவது:சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து பசுமை தீர்ப்பாயத்துக்கு கடிதங்கள் வருகின்றன. இதில், ஜூன் மாதம் வந்த, 13 கடிதங்களில் குறிப்பிடப்பட்ட பிரச்னைகளில், கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருந்தது. இதுபோன்ற கடிதங்களை ஏற்க முடியாது என, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு, அந்த, 13 கடிதங்களுக்கு மட்டுமே பொருந்தும். சுற்றுச்சூழல் பாதிப்பு புகார் கடிதங்களுக்கு பொருந்தாது.
சுற்றுச்சூழல் பாதிப்பு நிகழ்வுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில், பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள் மனுக்களாக ஏற்கப்படும். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தரப்பில் ஆஜராகாத போதும், மின்னஞ்சல் வாயிலாக கூடுதல் விபரங்கள் கோரப்படும்.
வழக்கறிஞர் இல்லாமலும், பொது மக்கள் இதுபோன்ற கடித மனுக்களை தாக்கல் செய்யலாம். தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, இதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire