நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் புறக்கணிப்பது ஏன்? சுப்ரீம்கோர்ட் கேள்வி
17 ஆடி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 132
நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் புறக்கணிப்பது ஏன்? என சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது. பள்ளிகளை திறப்பது குறித்து 3 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நவோதயா பள்ளிகளை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் துவக்க, அந்தந்த மாநில அரசுகள், நிலம் ஒதுக்கினால் போதும். மத்திய அரசே, கட்டமைப்புகளுக்கான செலவுகளை ஏற்கிறது. எனினும், தமிழகத்தில், நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க, மாநில அரசு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 16) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் விவகாரத்தில் 12 வார கால அவகாசம் தமிழக அரசு கோரியது. இந்த கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட் 3 வார காலத்திற்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அப்போது நீதிபதி நாகரத்னா நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் புறக்கணிப்பது ஏன்? கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறியதாவது:
* மத்திய அரசு 9ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம். சிபிஎஸ்இ (CBSE), ஐசிஎஸ்இ (ICSE) மற்றும் மாநிலப் பாடத்திட்டம் என அனைத்திலும் 10ம் வகுப்பு என்பது ஒரு பொதுத் தேர்வு (board exam) ஆண்டாகும். 8ம் வகுப்பு முடிந்தவுடனேயே அதற்கான அழுத்தம் தொடங்கிவிடுகிறது.
* 9ம் வகுப்பில் ஒரு புதிய மொழியை கற்பிக்க துவங்காமல், அதற்குப் பதிலாக 6ம் வகுப்பிலேயே அதைத் தொடங்கலாம், ஆனால் 9ம் வகுப்பில் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் அரசிடமிருந்து உரிய விளக்கத்தை அளிக்க நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவிட்டது.
மத்திய அரசின் திட்டங்கள் என்ற காரணத்திற்காக அவற்றை நிராகரிக்க கூடாது. உங்களுக்கு தனியாக கல்வி முறை இருக்கலாம், ஆனால் மத்திய அரசுப் பள்ளிகளைத் தடுக்காதீர்கள்.
இது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருப்பது என்பதால், நாங்கள் ஏன் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையைக் கொண்டிருக்காதீர்கள்'' என தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின், 1986ம் ஆண்டு கல்விக் கொள்கை அடிப்படையில், கிராமப்புற மாணவர்களுக்கு, தரமான கல்வியை உறுதி செய்திட, நாடு முழுதும், ஒவ்வொரு மாவட்டங்களிலும், 'ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி' எனும், உண்டு, உறைவிட மாதிரி பள்ளிகள் துவக்கப்பட்டன.
இந்த பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை, தாய் மொழி அல்லது மாநில மொழிகள், பயிற்று மொழியாக உள்ளன. அதன்பின், அனைத்து நவோதயா பள்ளிகளிலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பயிற்று மொழியாக உள்ளன.
கல்வி கட்டணத்தை பொறுத்தவரை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவ, மாணவியருக்கும், இலவச கல்வி வழங்கப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதம் 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவியர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, கட்டண விலக்கு வழங்கப்படுகிறது. இவ்வளவு ஏராளமான சலுகைகள் உள்ள நவோதயா பள்ளிகளுக்கு தான் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire