Paristamil Navigation Paristamil advert login

தயாரிப்பாளராகும் ஷாலினி ?

தயாரிப்பாளராகும் ஷாலினி ?

16 ஆடி 2026 வியாழன் 16:12 | பார்வைகள் : 144


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடித்து கடைசியாக கடந்த வருடம் "குட் பேட் அக்லி" படம் வெளிவந்தது. அப்படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.

அவரது 64வது படத்தையும் "குட் பேட் அக்லி" படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்க உள்ளார். ஆனால், படத்திற்கான தயாரிப்பாளர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள சில முன்னணி நிறுவனங்கள் அப்படத்தைத் தயாரிக்க முன்வந்தன. ஆனால், அஜித் கேட்ட சம்பளத்தில் அவர்களுக்குள் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

எனவே, தனது 64வது படத்தைத் தானே தயாரித்து நடிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம். அவரது மனைவி படத்தின் தயாரிப்பு வேலைகளை கவனித்துக் கொள்வார் எனத் தெரிகிறது. அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள்.விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.