Paristamil Navigation Paristamil advert login

8 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகும் ஜனநாயகன்!

 8 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகும் ஜனநாயகன்!

16 ஆடி 2026 வியாழன் 15:59 | பார்வைகள் : 143


விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இந்த படம் வெளியாக வேண்டியது. ஆனால் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழை கொடுக்காததால் அப்போது படம் வெளியாகவில்லை.

தற்போது ஆறு மாதங்கள் கழித்து வருகிற 23ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறிவிட்ட நிலையில் அவர் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தை திருவிழாவாக கொண்டாட விஜய் ரசிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இப்போதே பல தியேட்டர்களிலும் முன்பதிவு துவங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா ‘ஜனநாயகன் படத்தை மிகவும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.. இந்தியாவைத் தவிர 30க்கும் மேற்பட்ட நாடுகளில் படம் வெளியாகிறது.. உலகம் முழுவதும் சுமார் 7000 முதல் 8000 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும்’ என கூறியிருக்கிறார்.