Paristamil Navigation Paristamil advert login

விண்வெளிக்கு அனுப்பப்படும் தாமரை வடிவ வைர நகை

விண்வெளிக்கு அனுப்பப்படும் தாமரை வடிவ வைர நகை

16 ஆடி 2026 வியாழன் 14:15 | பார்வைகள் : 130


இந்தியா தனது தனியார் விண்வெளி முயற்சியில் புதிய வரலாற்றை படைக்கிறது.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம்-1 ரொக்கெட்டில், பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட ஆய்வக வைரத்தால் செய்யப்பட்ட தாமரை வடிவ நகை விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த வைரத் தாமரை, இந்தியாவின் கைவினை திறமை, கலாச்சாரம் மற்றும் புதுமையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் அடையாளமாகக் கருதப்படுகிறது.

"காஸ்மோஸ் டையமண்ட்ஸ்" என்ற நகை நிறுவனம் இதனை வடிவமைத்து வழங்கியுள்ளது.

தாமரை இந்தியாவின் தேசிய மலராகும். அது புனிதம், படைப்பு மற்றும் அறிவொளியை குறிக்கும் சின்னமாக இந்திய பாரம்பரியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

வடிவமைப்பில், தங்கக் கருவில் சுற்றி வைரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பாரம்பரியமாக லட்சுமி, பிரம்மா போன்ற தெய்வங்களின் ஆசனத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி பயணத்தின் கடுமையான அதிர்வுகள் மற்றும் அழுத்தங்களை தாங்கும் வகையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வைரத் தாமரை அறிவியல் ஆய்வுக்கான பொருள் அல்ல. ஆனால், இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் புதுமையை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாக விண்வெளிக்கு அனுப்பப்படுவது, நாட்டின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

விக்ரம்-1, இந்தியாவின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஏவுகணை ரொக்கெட் ஆகும்.