அணுகுண்டு தாக்குதலை தடுத்தவர் பிரதமர் மோடி: போலந்து நாட்டு அமைச்சர் புகழாரம்
16 ஆடி 2026 வியாழன் 13:50 | பார்வைகள் : 109
உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்த இருந்ததை, புடினிடம் பேசி தடுத்து நிறுத்தியவர் இந்திய பிரதமர் மோடி என போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி தெரிவித்தார்.
டில்லியில் நடந்த இந்தியா- போலந்து கூட்டு பொருளாதார ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி கூறியதாவது: பிரதமர் மோடி மிகவும் பிரபலமான, மதிக்கப்படும் ஒரு உலகத்தரம் வாய்ந்த அரசியல்வாதி ஆவார். இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் நீண்டகால உறவு உள்ளது.
பிரதமர் மோடி தன்னிடம் கூறுவதை அதிபர் புடின் உண்மையில் கவனத்தில் கொள்கிறார். ரஷ்யா-உக்ரைன் போரின் ஒரு நெருக்கடியான தருணத்தில் பிரதமர் மோடி ஏற்கனவே அந்த செல்வாக்கை நிரூபித்திருக்கிறார். உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்த இருந்ததை, புடினிடம் பேசி தடுத்து நிறுத்தியவர் இந்திய பிரதமர் மோடி. இவ்வாறு டியோபில் பர்தோஸூவ்ஸ்கி கூறினார்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire