இந்தியா -பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்; வரியற்ற பொருட்கள் பட்டியல் இதோ!
16 ஆடி 2026 வியாழன் 12:41 | பார்வைகள் : 123
இந்தியா -பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு தொழில் துறையினர், உற்பத்தியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்தியா - பிரிட்டன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இன்று (ஜூலை 15) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வெவ்வேறு துறைகள் வாரியாக, ஒப்பந்தம் அமல் செய்வதற்கு முன் இருந்த வரி விவரம் வருமாறு:
துறை -ஒப்பந்தம் அமலுக்கு முன் வரி
* பதப்படுத்திய உணவு- 70 சதவீதம் வரை
* கடல்சார் பொருட்கள்- 20 சதவீதம் வரை
* பழங்கள்- 20 சதவீதம் வரை
* தோல், காலணி பொருட்கள்- 16 சதவீதம் வரை
* எலக்ட்ரிக்கல் மிஷினரி- 14 சதவீதம் வரை
* ஜவுளி- 12 சதவீதம் வரை
* டீ, காபி- 10 சதவீதம் வரை
* மரம், காகிதம்- 10 சதவீதம் வரை
* அலுமினியம்- 10 சதவீதம் வரை
* கெமிக்கல்- 8 சதவீதம் வரை
* கனிமங்கள்- 8 சதவீதம் வரை
* இயந்திரங்கள்- 8 சதவீதம் வரை
* நறுமணப்பொருட்கள்- 8 சதவீதம் வரை
* எண்ணெய் வித்துக்கள்- 8 சதவீதம் வரை
* பிளாஸ்டிக், ரப்பர்- 6 சதவீதம் வரை
* சர்ஜிக்கல் கருவிகள்- 6 சதவீதம் வரை
* ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி- 4 சதவீதம் வரை
* பர்னிச்சர், விளையாட்டுப் பொருட்கள்- 4 சதவீதம் வரை
தற்போது ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு, மேற்கண்ட அனைத்து பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியும் பூஜ்யம் ஆகியுள்ளது. இதனால் இந்திய தொழில் துறையினருக்கான வர்த்தக வாய்ப்புகள் பிரிட்டனில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்வேகம் அளிக்கும்!
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இது இந்தியா- பிரிட்டன் இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும். இந்தியா -பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்ததன் மூலம், நமது பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும். நமது இருநாட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும். விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
தொழில்நுட்பம் உள்ளிட்ட துறையில் உறவுகள் வலுவடைவதுடன், திறமையான இந்தியர்கள் அங்கு சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். பிரிட்டனில் தற்காலிகமாகப் பணியாற்றும் இந்தியாவை சேர்ந்த நிபுணர்களுக்கு ஆதரவை வழங்குவதோடு, இந்திய நிறுவனங்களின் போட்டித்தன்மையையும் வலுப்படுத்தும். இத்தருணம் நமது ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையையும், நமது உறுதியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவும், பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்பட வழிவகுக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire