விரைவில் பறக்கும் பஸ்கள் அறிமுகம்: மத்திய அமைச்சர் கட்கரி
16 ஆடி 2026 வியாழன் 09:31 | பார்வைகள் : 129
இந்திய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விரைவில் அதிவேகமாக செல்லும் மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
லக்னோ - கான்பூர் இடையிலான அதிவிரைவுச் சாலையை திறந்து வைத்து கட்கரி பேசியதாவது:
விரைவில் பறக்கும் பஸ்களை அறிமுகம் செய்ய உள்ளேன். கடலில் தரையிறங்கும் விமானத்தை ஏற்கனவே விமானத்தை கொண்டு வந்துள்ளேன். அந்த விமானத்தில் பயணித்து கடலில் தரையிறங்கி உள்ளேன்.
எனது அமைச்சகத்தின் கீழ், மின்சாரத்தில் இயங்கும் அதிவிரைவு போக்குவரத்து அமைப்பை உருவாக்க உள்ளேன். இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக மக்கள் சென்றடைய முடியும். ஆனால், எவ்வளவு வேகத்தில் சென்றோம் என்பதை அவர்களால் உணர முடியாது. இவ்வாறு கட்கரி பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire