Paristamil Navigation Paristamil advert login

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

16 ஆடி 2026 வியாழன் 08:28 | பார்வைகள் : 148


அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி நீர் ஒழுங்கு முறை கூட்டத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

டில்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய (CWMA) அலுவலகத்தில்  காவிரி ஒழுங்குமுறை குழு கூட்டம் நடந்தது. தமிழகம், கர்நாடகா அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்கவேண்டும் என  தமிழக அரசு வலியுறுத்தியது.

ஆனால் கர்நாடக அரசு  கூறியதாவது:

ஜூன் மாதம் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை  பெய்யவில்லை. இதனால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. ஜூலை மாதம் சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது.  குறைந்தளவு தண்ணீர் மட்டுமே அணையில் சேமிக்கப்பட்டுள்ளது. பருவமழை துவங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அணைகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்படவில்லை.   இருக்கும் தண்ணீரும் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  

இதற்கு முன்பு இல்லாத வகையில், கர்நாடகா மழைப் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.காவிரி படுகைகளில்  கடுமையான பற்றாக்குறை நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது எனத் தெரிவித்தனர்.

இக்குழுவின் அடுத்த கூட்டம் ஜூலை 28 ம் தேதி நடைபெற உள்ளது.