Paristamil Navigation Paristamil advert login

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்; புதிய ரயில் திட்டங்கள் பற்றி பிரதமர் மோடி பெருமிதம்

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்; புதிய ரயில் திட்டங்கள் பற்றி பிரதமர் மோடி பெருமிதம்

16 ஆடி 2026 வியாழன் 07:25 | பார்வைகள் : 133


ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ரயில் பாதை உருவாக்குவது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ரயில் போக்குவரத்து வசதி பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். பாராதிப்-ஹரிதாஸ்பூர் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல் மற்றும் ராஜ்கர்சாவான்-டங்கோபோசி இடையே நான்காவது ரயில் பாதை அமைத்தல் ஆகிய இரண்டு முக்கியமான ரயில்வே  திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டங்கள் ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். இவை ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்தி, நெரிசலைக் குறைத்து, சுற்றுலாவை மேம்படுத்தும்.ரூ.62,500 கோடி மதிப்பிலான மொபைல் போன்  உற்பத்தித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் உற்பத்தியை அதிகரிக்கவும்,  இந்தியாவில் உலகளவில் போட்டியிடக்கூடிய ஒரு சூழலமைப்பை உருவாக்கவும் உதவும்.

வரும் ஆண்டுகளில், இத்திட்டம் இளைஞர்களுக்குப் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.ரூ. 1,27,500 கோடி மதிப்பிலான 'செமிகான் 2.0' (Semicon 2.0) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதிக முதலீடுகளை ஈர்க்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.  முக்கியமான துறைகளில் தொழில்நுட்பத் தன்னிறைவை மேம்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.