Paristamil Navigation Paristamil advert login

கன்னட அமைப்புகள் போராட்டம்: கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தம்

கன்னட அமைப்புகள் போராட்டம்: கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தம்

16 ஆடி 2026 வியாழன் 06:23 | பார்வைகள் : 136


மேகதாது அணையைக் கட்டுவதற்கு தொடர்ந்து கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கக்கூடாது என தெரிவித்து வருகின்றனர்.

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரம் தமிழக விவசாயிகள் மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தை எதிர்த்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்க்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு எந்தவிதமான பதற்றமான சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக ஓசூர் அருகே இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.ஒசூரில் பேருந்துகள் இன்றி மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் இருமாநில எல்லைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.