Paristamil Navigation Paristamil advert login

டி20யிலும் வங்காளதேசத்தை புரட்டியெடுத்த ஜிம்பாப்வே

டி20யிலும் வங்காளதேசத்தை புரட்டியெடுத்த ஜிம்பாப்வே

15 ஆடி 2026 புதன் 16:10 | பார்வைகள் : 135


வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே 170 ஓட்டங்கள் குவித்தது.

ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, ஜிம்பாப்வே முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.

பிரையன் பென்னெட் (Brian Bennett) 30 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசினார். ரியான் பர்ல் (Ryan Burl) 25 பந்துகளில் 30 ஓட்டங்களும், பிராட் எவன்ஸ் (Brad Evans) 10 பந்துகளில் 19 ஓட்டங்களும் விளாசினர்.

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் குவித்தது.

நஹித் ராணா 4 விக்கெட்டுகளும், மொஹம்மது சைப்புதின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.