Paristamil Navigation Paristamil advert login

Fontainebleau காட்டுத்தீ- தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.— 800 தீயணைப்பு வீரர்கள் களத்தில்!

Fontainebleau காட்டுத்தீ- தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.— 800 தீயணைப்பு வீரர்கள்  களத்தில்!

15 ஆடி 2026 புதன் 09:10 | பார்வைகள் : 258


இல்-து-பிரான்சிற்கு மிக அருகாமையிலுள்ள Fontainebleau காட்டில் ஏற்பட்ட இரண்டு பெரிய காட்டுத்தீக்களை, 48 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு,, சுமார் 800 தீயணைப்பு வீரர்கள்  ஓரளவிற்குத் தீயைக் கட்டுக்குள் கொணடு வந்துள்ளனர்.

Media

இதில் மொத்தம் 2,000 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்து கருகியுள்ளன. தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாலும் தீ முற்றாக அணைக்கப்படவில்லை.

A6 நெடுஞ்சாலை இன்னமும் இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் இன்னும் பல நாட்கள், சில பகுதிகளில் ஒரு வாரம் கூட களத்தில் செயல்பட வேண்டியிருக்கும், என தீயணைப்புப் படையின் பிராந்தியப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று  புதன்கிழமை  வான்வழி உதவிகளான,

3 Canadair

1 Dash

2 உலங்கு வானூர்திகள் (bombardiers d’eau)

ஆகியவைவை களமிறக்கபட்டு தீயணைப்பு வீரர்களிற்கு உதவ ஆரம்பித்துள்ளன.