Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா கடற்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல்

அமெரிக்கா கடற்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல்

15 ஆடி 2026 புதன் 07:26 | பார்வைகள் : 290


கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 14 மாலை 4 மணி முதல் (அமெரிக்க நேரம்) அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், தங்களுக்கு எதிரான "அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு" தொடர்ந்தால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.