Paristamil Navigation Paristamil advert login

ராஜினாமா செய்து கட்சியில் இணைந்தால் அது குதிரை பேரம் கிடையாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

ராஜினாமா செய்து கட்சியில் இணைந்தால் அது குதிரை பேரம் கிடையாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

15 ஆடி 2026 புதன் 12:52 | பார்வைகள் : 140


அவரது பேட்டி;

தென் மாவட்டங்களில் கிளைக்கழகம் வரை அதிமுக என்ற ஒரு கட்சி எங்கேயும் இல்லாமல் தான் இருக்கிறது. மாவட்ட அளவில் தான் கட்சி உள்ளது.

கட்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு முன்னாள் அமைச்சர்களும்  ஒரு மேடையை போட்டு, 10 பேரை வைத்துக் கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் ஏதோ பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

திமுகவின் பொதுச் செயலாளர் இபிஎஸ் என்று ஒருவர் இருக்கிறார் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களுக்கு ஞாபகம் இல்லை, நம்பிக்கை இல்லை. 
3eகுதிரை பேரத்தில் யார் மாட்டி இருக்கின்றனர் என்பது தெரியும். குதிரை பேரத்தில் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். குதிரை பேரம் என்றால் முதலில் எல்லாரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

eயாராவது பணம் கொடுத்து யாரையாவது வாங்கினால் தான் குதிரை பேரம். யாராவது ராஜினாமா செய்துவிட்டு வந்தால் அதன் பெயர் குதிரை பேரம் கிடையாது. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. யாரையும் நீங்கள் வாங்க என்று நாங்கள் அழைக்கவில்லை.

இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.