இரவல் ஆட்சி நடத்துகிறார் விஜய்: இபிஎஸ்
15 ஆடி 2026 புதன் 10:29 | பார்வைகள் : 134
முதல்வர் விஜய் பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தவில்லை. 108 இடங்களில் வெற்றி பெற்றார். மற்ற கட்சி வெற்றி பெற்ற, எம்எல்ஏக்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார் என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 10ம் தேதி கரூர் சென்ற முதல்வர் விஜய் பேசும் போது திமுகவும், அதிமுகவும் கூட்டுக்களவாணிகள் என்று குறிப்பிட்டு உள்ளார். இது எவ்வளவு பெரிய வார்த்தை. அவர் வகிக்கும் பொறுப்புக்கு சரியா என அவர் சிந்திக்க வேண்டும். அவர் முதல்வராக இருக்கிறார். எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று யோசித்து பயன்படுத்த வேண்டும். அதிமுக கூட்டுக்களவாணி அல்ல. விஜய் தான் களவாளி
அதிமுக சார்பில் இரட்டை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை குதிரை பேரத்தின் மூலமாக ராஜினாமா செய்ய வைத்தனர். உடனடியாக தவெகவில் இணைத்துள்ளனர். இது தான் களவாளிகள். முதல்வர் தான் எங்களது எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் சேர்த்துள்ளனர். அவர் தான் களவாளியா
வெளிப்படைத்தன்மை எங்கே
தூய ஆட்சி. வெளிப்படையான ஆட்சி என சொன்னார். இப்போது யார் யாரை சேர்த்துக் கொண்டுள்ளார். யார் யாரை குற்றம் சொன்னார். குற்றம் சொன்னவரை கட்சியில் சேர்த்து கொண்டு உள்ளார். அப்போது தூய ஆட்சி. வெளிப்படைத்தன்மை எங்கு இருக்கிறது.60 நாட்கள் ஆகிவிட்டது. என்ன செய்தனர்.சிங்கப்பெண் அதிரடிப்படை என செய்தனர். அதனை சரியாக செய்யவில்லை. இதெல்லாம் ஷோ. இதனால் மக்களுக்கு கிடைப்பது என்பது காலம் போக்கில் தான் தெரியும்.
விஜய் இன்னும் முதல்வர் அந்தஸ்துக்கு வரவில்லை. இன்னும் நாலாந்திர பேச்சாளர் போல் பேசுகின்றனர். பஞ்ச் டயலாக் பேசுகின்றனர். ஆக்கப்பூர்வமானதாக பேச வேண்டும்.எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து கட்சி மாறுவது தமிழகத்தில் முதல்முறையாக நடக்கிறது.
கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் தலைவர்களை அனுசரிக்கும் வரையில் ஆட்சி நிலைக்கும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் நாளுக்கு ஒரு செய்தி சொல்கின்றனர். தினமும் ஒரு செய்தியை சொல்கின்றனர். ஒரு கட்சித் தலைவர் கவர்னர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதரவு கொடுக்கிறோம். ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்கிறார். ஆனால், மறுநாள் வேறு கருத்து சொல்கிறார்.இப்படி முரண்பட்ட கருத்து சொல்லும் கட்சியை நம்பி ஆட்சி செய்கிறார்.பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தவில்லை. 108 இடங்களில் வெற்றி பெற்றார். மற்ற கட்சி வெற்றி பெற்ற, எம்எல்ஏக்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார்.
இரண்டு திராவிட கட்சிகள் சரியில்லை என்றார். ஆனால், இப்போது, ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர்கள் தான் ஆட்சி அமைக்க உறுதியாக இருக்கின்றனர். தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு. தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சா. இரட்டை வேடமா? திருமாவளவன் தினமும் ஒரு பேச்சு பேசுகிறார். எந்த கருத்தை எடுத்துக் கொள்வது?
திமுக அதிமுக இணைந்து ஆட்சி என கட்டுக்கதை கட்டிவிட்டுள்ளனர்.அதிமுக வை பொறுத்தவரை நாங்கள் சொல்வது தான் எங்களது கருத்து. மற்றவர்களின் கருத்தை இணைக்கக்கூடாது. எம்ஜிஆர் கட்சி துவங்கிய போது தீயசக்திதிமுக என சொல்லி தான் கட்சியை துவங்கினார். அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம்.195 இடங்களில் பிரசாரம் செய்த போது திமுகவின் தவறுகளை தான் சுட்டிக் காட்டினேன். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், சட்டசபையில் திமுகவை தவறுகளை சுட்டிக்காட்டி பேசினோம். இன்றும் அதே நிலை தான்.கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால், பெரிய அண்டாவில் அல்வா கிண்டி கொடுத்துள்ளனர்.
காங்கிரசில் என்ன இருக்கிறது. 100 ஆண்டு விழா கண்டகட்சி தமிழகத்தில் என்ன நிலையில் இருக்கிறது. காங்கிரசின் நிலைமை பரிதாபமான நிலைமை. தனியாகவா வெற்றி பெற்றனர். திமுக கூட்டணியில் இருந்தனர். பல கட்சிகள் சேர்ந்து வெற்றி பெற்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆக இருக்கும் போது கொள்கை கூட்டணி. பலமான கூட்டணி. இன்று கொள்கையும் கிடையாது. கூட்டணியும்இல்லை. சுயநலத்துக்காக திமுக கூட்டணியில் வெற்றி பெற்று. தவெக உடன் சென்று பதவி வாங்கி உள்ளனர். அதில் கொள்கை இல்லை.
சினிமாவில் புதுமை படைக்கிறது போன்று, தேர்தலில் யாரெல்லாம் ஆதரவு, ஆலோசகர் இருந்தவர்கள் எல்லாம் ஆலோசகர்களாக நியமித்துளளனர். ஜனநாயகன் பட தயாரிப்பாளரை டில்லி அரசின் மேலிட பிரதிநிதியாக நியமித்துள்ளனர். அனைத்தையும் சினிமா ஆக்கிவிட்டார். அரசை கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire