Paristamil Navigation Paristamil advert login

மிஷ்கின் தொடர்பில் விஜய் சேதுபதி அதிரடி!

மிஷ்கின் தொடர்பில்  விஜய் சேதுபதி  அதிரடி!

14 ஆடி 2026 செவ்வாய் 16:15 | பார்வைகள் : 136


மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2, டிரெய்ன் ஆகிய இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பிசாசு 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடித்தாலும் டிரெய்ன் படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோ. அதோடு விஜய் சேதுபதிக்கும், மிஷ்கினுக்கும் இடையே நல்ல நட்பும், புரிதலும், அன்பும் இருக்கிறது.

நேற்று டிரெய்ன் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி ‘டிரெயன் உங்களுக்கு திரில்லர் படம் போல தெரியும். ஆனால் நாங்கள் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தோம்.. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல அன்பு உண்டு’ என்று கூறி மிஷ்கினை கட்டிப்பிடித்து அவரின் கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்தார்..

மேலும் ‘நான் துணை நடிகராக இருந்தபோது மிஷ்கினின் படத்துக்கு ஆடிசன் போயிருக்கிறேன்.. ஹீரோ ஆன பிறகு ஒரு முறை என்னை ஒரு படத்திற்கு அழைத்தார்.. இவரை பார்த்தால் சைக்கோ மாதிரி இருக்கு.. எதற்கு வம்பு என்று நேராக சென்று என்னிடம் தேதி இல்லை என்று சொல்லி மறுத்து விட்டேன்..

ஆனால் சைக்கோ படம் பார்த்து அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன்.. அதன்பின் நேரில் சந்தித்து 8 மணி நேரம் நாங்கள் இருவரும் அந்த படத்தை பற்றி பேசினோம்.. அப்போதுதான் ஒரு வாட்ச்சை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.. இப்படி தொடங்கிய நட்பு பிசாசு 2 மற்றும் தற்போது டிரெய்ன் வரை வளந்திருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்..