இலங்கையில் தாய், தந்தையை கொலை செய்த மகன் கைது
14 ஆடி 2026 செவ்வாய் 15:03 | பார்வைகள் : 146
எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால் இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தம்பதியரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலாபிட்டிய பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire