சூரியனின் காந்தபுலத்தை துல்லியமாக படம்பிடித்த GREGOR சூரிய தொலைநோக்கி!
6 புரட்டாசி 2020 ஞாயிறு 14:01 | பார்வைகள் : 12051
ஸ்பெயின் நாட்டில் ஜெர்மன் கூட்டமைப்பால் இயக்கப்படும் டெய்டு ஆய்வகத்தில் அமைந்துள்ளது ஐரோப்பாவின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கி கிரிகோர் (GREGOR).
சூரியனின் மிக நேர்த்தியான மற்றும் துல்லியமான உள்அமைப்பை இந்த தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. குறிப்பாக சூரியனின் காந்தபுலத்தை மிகத் துல்லியமாக படம்பிடித்துள்ளது.
லீப்னிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் சோலார் பிசிக்ஸை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் கொண்ட குழுவால் இந்த தொலைநோக்கியின் லென்ஸில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவிலிருந்து முன்பைவிட மிகத் துல்லியமாக, தெளிவாக சூரியனைக் காணமுடியும்.
மறுவடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கிமூலம் சூரியனில் 50கிமீ தொலைவில் உள்ள தெளிவான விவரங்களை விஞ்ஞானிகளால் காணமுடியும். கூர்மையான ஊசியை ஒரு கால்பந்தின்மீது வைத்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்து பார்ப்பதைப் போன்று தெரியும்.
இந்த திட்டம் மிகவும் உற்சாகமாகவும், சவாலாகவும் இருந்தது. இந்த தொலைநோக்கியின் படத்தரம், ஒளியியல், இயக்கவியல் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றில் மறுவடிவமைப்பு செய்துள்ளதாக டாக்டர் லூசியா க்ளிண்ட் மற்றும் டெனெர்ஃபில் ஆகியோர் கூறியுள்ளனர். பல சிக்கல்களுக்கு மத்தியில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan