270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! சரித்திரம் படைத்த இந்திய மகளிர்படை
14 ஆடி 2026 செவ்வாய் 13:15 | பார்வைகள் : 126
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 285 ஓட்டங்களும், இங்கிலாந்து 170 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 341 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யஸ்டிகா பாட்டியா (Yastika Bhatia) 113 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து 457 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 186 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஸ்நேக் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்றது.
142 ஆண்டுகால லார்ட்ஸ் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த முதல் மகளிர் டெஸ்டில் இந்திய வென்று சாதித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire