Paristamil Navigation Paristamil advert login

மூன்றாவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்

மூன்றாவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்

14 ஆடி 2026 செவ்வாய் 07:57 | பார்வைகள் : 299


மூன்றாவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் , ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய தாக்குதல்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்களுக்குப் பின்னர், புஷெஹ்ர் (Bushehr), சா பஹார் (Chabahar), ஜாஸ்க் (Jask), கொனாரக் (Konarak), அபு மூசா (Abu Musa) மற்றும் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) ஆகிய பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வெற்றிகரமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வணிகக் கப்பல் போக்குவரத்து மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என அமெரிக்க இராணுவம் தெரிவிக்கிறது.

அத்துடன் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் 50,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.