Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனின் ஜனாதிபதி காலத்தின் இறுதி தேசிய தின அணிவகுப்பு - 7,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு!!

மக்ரோனின் ஜனாதிபதி   காலத்தின் இறுதி தேசிய தின அணிவகுப்பு - 7,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு!!

13 ஆடி 2026 திங்கள் 20:59 | பார்வைகள் : 609


தேசிய தினமான ஜூலை 14 அணிவகுப்பின் 2026ஆம் ஆண்டுப் பதிப்பு, "ஐரோப்பாவின் மூலோபாய எழுச்சி" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. அதேவேளை, குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் தனது இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியாக பங்கேற்கும் இறுதி ஜூலை 14 அணிவகுப்பாகவும் இது அமைகிறது.

உக்ரைனுக்கு ஆதரவை மீளுறுதிப்படுத்தும் வகையில் பரிஸில் நடைபெற்ற 37 நாடுகள் பங்கேற்ற கூட்டணிக் கலந்துரையாடலுக்கு அடுத்த நாளே இந்த அணிவகுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இந்த அணிவகுப்பில், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் கூட்டணியைச் சேர்ந்த 500 இராணுவ வீரர்கள் முன்னணியில் அணிவகுக்கின்றனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான இராணுவத்தினர், காவல்துறையினர், ஜொந்தாமினர் அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் பங்கேற்கின்றனர். மேலும், முதல் முறையாக தரைப்படை மற்றும் விமானப்படையின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் சிறப்பு இராணுவ காட்சியும் இடம்பெறவுள்ளது. இதன் மூலம் நவீன போர்க்களத்தில் உளவுத் தகவல் சேகரிப்பு, விமானத் தாக்குதல், தளவாட வசதிகள் மற்றும் காயமடைந்தோருக்கான மருத்துவ உதவிகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைக் காட்சிப்படுத்த பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால், இந்த ஆண்டு பொதுமக்கள் அணிவகுப்பைக் காண முன்பதிவு செய்து தனிப்பட்ட QR குறியீட்டைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக பரிஸ் காவல்துறை அறிவித்துள்ளது. அணிவகுப்பு மற்றும் அதே நாளில் நடைபெறும் பிரான்ஸ் - ஸ்பெயின் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியை முன்னிட்டு, 7,000 காவல்துறையினரும் ஜொந்தாமினர் அதிகாரிகளும், 2,000 தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.